திருமணத்தின் போது மோதல் ; 6 பேர் காயம் – பாணந்துறையில் சம்பவம்

167 0

பாணந்துறையில் சுற்றுலா விடுதி ஒன்றில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற  திருமணத்தின் போது இடம்பெற்ற மோதலில் 6 காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் காயமடைந்தவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களால் தாக்கப்பட்ட ஹோட்டல்கள் ஊழியர்கள் ஐவரும், மலர் அலங்காரம் செய்வதற்கு வந்த ஒருவருமே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த தரப்பினராலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹோட்டல் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.