இலங்கை மாணவர்கள் ஏழு பேர் மீட்பு

272 0

உக்ரேனின் கார்கிவ் பகுதியில் உள்ள சித்திரவதைக் கூடங்களில் இருந்து இலங்கை மாணவர்கள் ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று, உக்ரைன் ஜனாதிபதி வோல்டோமிர் செலென்ஸ்கி தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய படையினரால் பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சித்திரவதைக் கூடங்களில் இருந்தே அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் முதல் பாதாள சித்திரவதைக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்களைப் பற்றி குறிப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி, மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனார்.

ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள கார்கிவ் பகுதி, சமீபத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து  உக்ரைன் படைகளால்  மீட்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சித்திரவதைக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை மாணவர்கள், குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ரஷ்ய இராணுவத்தால் மார்ச் மாதம் அந்தப் பகுதி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.