உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

127 0

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளிவட்டுவான் பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இன்று காண்டுபிடிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசி ஒருவர்   வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து கிரண் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும்  இது தொடர்பான அறிக்கையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய பின்னரே யானை எதனால் மரணமடைந்துள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.