பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்வின் பாதுகாப்புப் பணிக்காக பெரும் நிதி செலவிடப்படுகிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்த நியூமார்க் போஸ்ட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
`மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கின் பாதுகாப்பு பணிக்காக செலவிடப்படும் தொகை சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் எனத் தெரிகிறது. மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குக்காக செலவிடப்படும் தொகை, பிரித்தானியாவின் வரலாற்றில் ஒரே நாளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். இதுவரை பிரித்தானிய காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளிலேயே இது மிகப்பெரிய சவாலான பணி.
19 ஆம் திகதி நடைபெறும் இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.
கடந்த 2011 இல் இளவரசர் மற்றும் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த பாதுகாப்பு செலவை அதனுடன் ஒப்பிட முடியாது. வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.