ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிதி இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.