ஜி.எல்.பீரிஸிடம் இருந்து பறிபோகும் பொஹொட்டுவ தவிசாளர் பதவி !!

164 0

பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சி எம்.பியாக செயற்பட்டுவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவரை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அந்த பதவிக்கு வேறொரு பேராசிரியரை நியமிப்பதே பொருத்தமானது என கட்சியில் பலரது கருத்தும் நிலவுகிறது.

அத்துடன், கோப் குழு தலைவர் பதவிக்கு பேராசிரியர் ரஞ்சித் பண்டார பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சித் பண்டாரவிற்கு தற்போது பல நாடாளுமன்றக் குழுக்களின் அங்கத்தவராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.