படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு சந்தேகநபரிடம் இருந்து ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் 09 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று வெற்று ரவைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் படபொல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் எனவும் அவர் இன்று (17) படபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.