சிலர் எனது பங்கேற்பை தவறாகப் பார்த்தார்கள்- ரோஹன திஸாநாயக்க

130 0

ஆசிய கிரிக்கட் சாம்பியன் மற்றும் ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்கவில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க அண்மையில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

இதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க நேற்று (16) ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்து தனது பங்கேற்பு மற்றும் எதிர்ப்புக்களுக்கு பதிலளித்தார்.

சிலர் எனது பங்கேற்பை தவறாகப் பார்த்ததாகவும், அதனால் தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நான் சிறுவயது முதல் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், தடகளம், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் விளையாடியுள்ளேன்.

என்னை யார் விமர்சித்தாலும், இந்த நாட்டில் விளையாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.