மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் தலைநகரத்தை மாநகரசபையாக அறிவிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, கம்பஹா மற்றும் மன்னார் ஆகிய நகரசபைகள் இவ்வாறு மாநகரசபைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
உள்ளூராட்சி மன்ற அமைச்சர்கள் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகரசபைகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.