மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 பேர் வரை காணாமல்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்ததுள்ளனர்.
இதனை அடுத்து, உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகொப்டர்களை அனுப்ப அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்னர். மேலும் 10 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.