பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி , சர்வஜன நீதி அமைப்பு ஆகின இணைந்து முன்னெடுத்துவரும் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரை இடம்பெறும் வாகன வழி கையெழுத்து வேட்டை பேரணி இன்று 17 ஆம் திகதி திருகோணமலை சிவன் கோயிலடி மற்றும் அனுராதபுர சந்தி கிளிவெட்டி போன்ற இடங்களில் இடம்பெற்றது.
இதில் பெருமளவான மக்கள் தமது ஆதரவினை வழங்கியதுடன் கையெழுத்துக்களை இட்டனர்.