பழிவாங்கலினால் நாமல் கைதுசெய்யப்படவில்லை

355 0

John-seniviratne-720x480நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கலினால் கைதுசெய்யப்படவில்லை என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தவறுசெய்திருந்தால், அதற்கான ஆதாரங்கள் இருப்பின் அவரை கைதுசெய்ய சட்டத்தில் அனுமதியுள்ளது.
அவரை கைதுசெய்வது அரசியல் பழிவாங்கலாயின் அதனை இவ்வாளவு காலம் தாழ்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் முடிந்தவுடனேயே அவரை கைதுசெய்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.