இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலிற்கு பின்னால் நடந்து சென்றவேளை தனது தாயாரின் உடலின் பின்னால் நடந்து சென்ற பழைய நினைவுகள் திரும்பின அது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனையிலிருந்து மகாராணியின் உடல் வெஸ்ட்மினிஸ்டர் ஹோலிற்கு எடுத்து செல்லப்பட்ட அதன் பின்னால் மன்னர் சார்ல்ஸ் வில்லியம் ஹரி சகோதரர்கள் சென்றிருந்தனர்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வில்லியம் உடலின் பின்னால் நடப்பது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
சில நினைவுகள் திரும்பின என அவர்தெரிவித்துள்ளார்.
1997 சர்வதேச ஊடகங்களின்பார்வையின் மத்தியில் டயனாவின் உடலின் பின்னால் வில்லியமும் ஹரியும் நடந்துசென்றனர்.
சமீப காலங்களில் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ள சகோதாரர்கள் தங்கள் தாயாரின் மரணமும் அவரின் உடலின் பின்னால் சென்றமையும் எவ்வளவு மனை உளைச்சல் மிக்க விடயமாக காணப்பட்டது என்பதை பல தடவை தெரிவித்திருந்தனர். டயனாவின் உடலின் பின்னால் சோகத்துடன் நடந்துசென்றபோதிலும் அதனை அவர்கள் தங்கள் முகத்தில் வெளிப்படுத்தவில்லை.
இம்முறை சூழ்நிலை வேறு விதமானதாக காணப்படுகின்றது ஆனால் உணர்வு, நிகழ்வின் புனிததன்மை,கமராக்கள் மக்களின் முன்னால் முக்கியமான நிகழ்வு போன்ற விடயங்களில் ஒற்றுமை காணப்படுகின்றது.