பொலிஸ் திணைக்களத்தில், 60 வயது பூர்த்தியாகும் 1,282 அதிகாரிகள் இவ்வருடத்துடன் ஓய்வு பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதவி தொடக்கம் பல்வேறு தர நிலை பதவிகளை பகிப்போரே இவ்வாறு ஓய்வுபெறவுள்ளனர்.
இவ்வாறு 60 வயது பூர்த்தியாவதால் ஓய்வுபெறவுள்ள பட்டியலில், இரு சிரேஷ்ட ப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 8 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 17 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், 21 உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், 35 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் அடங்குவதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
ஏனையோர் பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜன், காண்ஸ்டபிள் உள்ளிட்ட தர நிலை பதவிகளில் சேவையாற்றுவோராவர்.