ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை செவ்வி கண்ட செய்தியாளரை பொலிஸார் பின்தொடர்வதாக குற்றச்சாட்டு!

178 0

ஜனாதிபதியை நேர்காணல் செய்து 24 மணித்தியாலத்தின் பின்னர் பொலிஸ் வாகனமொன்று தன்னை பின்தொடர்ந்ததாக சர்வதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏபிசியின் செய்தியாளர் அவனி டயஸ் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை நேர்முகம் கண்டு 24 மணித்தியாலத்தின் பின்னர் ஊடக குழுவினர் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தை  பொலிஸ் வாகனம் பின்தொடர்ந்தது என அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

நானும் எனது ஊடக குழுவினரும் இந்த வருட ஆரம்பம் முதல் போராட்டங்கள் குறித்த செய்திசேகரிப்பில் ஈடுபட்டுள்ளோம்,நாங்கள் ஜனாதிபதியை பேட்டி கண்டோம் அது முடிவடைந்து 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவைகள் பொலிஸார் எங்கள் வாகனத்தினை தடுத்து நிறுத்தினர் , நாங்கள் எதையோ மறைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.