முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற வாக்குவாத சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த 33 அகவை உடைய குலேந்திரதாஸ் விஜயதாஸ் என்ற நபரே படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 42 அகவை உடைய குடும்பஸ்தர் ஒருவர் மல்லாவி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மல்லாவி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.