சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேருடன் டிங்கி படகு மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் வடக்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை கண்காணித்து சோதனையிட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு நடத்துனருடன், 18 வயதுக்கு மேற்பட்ட 12 ஆண்கள், 4 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.