மகாராணிமறைவு – குடியரசாவது குறித்து அவுஸ்திரேலியா விவாதிக்கவேண்டும் – முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

112 0

இரண்டாவது எலிசபெத் மாகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் காலம் முடிவடைந்ததும் அவுஸ்திரேலியா குடியரசாக மாறவேண்டும் என்பது குறித்த விவாதங்கள் இடம்பெறும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னை குடியரசுவாதி என அழைத்துக்கொள்ளும் அவர் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மகாராணி எங்களை விட்டு பிரிந்ததும் குடியரசாக மாறவேண்டுமா என்பது குறித்து விவாதிக்கும் நிலை ஏற்படும் எனநான் எதிர்பார்த்தேன் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் நிலையான அளவான விவாதத்தை நடத்த முடியும் என நான் நினைக்கின்றேன் இது இறுதியில் எம்மை குடியரசின் திசையில் கொண்டு செல்லும் எனவும் நான் நினைக்கின்றேன் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது விரைவாகயிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மகாராணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் துயரமான நெருக்கடியான தருணங்களில்உணர்வுகளை வெளிப்படுத்தாமலிருக்கும் மகாராணியின் இயல்பு குறித்தும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேடைக்கு செல்வதற்கான நீண்ட வரிசையில் நானும் மகாராணியும் நின்றுகொண்டிருந்தோம் அவ்வேளை நான் யாரையாவது அழைத்து உங்களிற்கு கதிரையொன்றை கொண்டுவர சொல்லட்டுமா என கேட்டேன் அதற்கு மகாராணி எனக்கு நிற்பது பிரச்சினையில்லை என தெரிவித்தார் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.