நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் காரணமாக இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் நபரொருவர் மீது பொல்லு ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் இருவருடன் சேர்ந்த மதுபானம் அருந்தியுள்ள நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் நிட்டம்புவ எல்லக்கல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால், குறித்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
படுகாயமடைந்த குறித்த நபர் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்லக்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
மோதலின் போது சந்தேக நபரும் காயமடைந்துள்ள நிலையில் அவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, திருகோணமலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய மகாமாயாபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பேதிஸ்புர பிரதேசத்தில் சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.