தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு கிழக்கின் அம்பாறை பொத்துவிலில் இருந்து வடக்கின் நல்லூர் வரையான மாபெரும் எழுச்சிப்பேரணி இன்று ஆரம்பமானது.
பொத்துவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த தீயாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஊர்வலம் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் .கஜேந்திரகுமார், பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாளை மட்டக்களப்பை ஊர்தி வந்தடையவுள்ளதுடன் இங்கும் பல்வேறு இடங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.