சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சி தொடராக தயாரிக்கும் முயற்சிக்கு சேர்ன் வோர்னின் மகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இது அவமரியாதை செய்வதற்கும் அப்பாற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
சேன் வோர்ன் 20 வருடங்களாக வர்ணணையாளராக பணியாற்றிய அவுஸ்திரேலியாவின் நைன் நெட்வேர்க் மார்ச் மாதம் சேன் வோர்னின் எதிர்பாராத மறைவிற்கு பின்னர் அவரது வாழ்க்கையை தொலைக்காட்சி தொடராக தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் அவரது குடும்பத்தினர் இது உணர்வுகளை மதிக்கும் நடவடிக்கையில்லை என குறிப்பிட்டுள்ளதுடன் இதனை நிறுத்தவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
நீங்கள் எனது தந்தையை மதிக்கின்றீர்களா அல்லது அவரது குடும்பத்தை மதிக்கின்றீர்களா என சேன் வோர்னின் மகள் புருக் வோர்ன் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
அவர் உங்கள் தொலைக்காட்சிக்கு பெருமளவு உதவினார் ஆனால் அவர் உயிரிழந்து ஆறு மாதங்களில் அவரது வாழ்;க்கையை நீங்கள் தொலைக்காட்சி தொடராக தயாரிக்க தீர்மானித்துள்ளீர்கள் என அவர் சாடியுள்ளார்.
சேன் வோர்னின் முன்னாள் முகாமையாளர் ஜேம்ஸ் எர்ஸ்கைனும் முன்னர் இதற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
அவர் உயிரிழந்து சில மாதங்களே ஆகின்ற நிலையில் அவரை பயன்படுத்தி பரபரப்பாக எதனையோ செய்யநினைப்பது குறித்து அவர்கள் வெட்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைய பெரிதாக உணர்ச்சியுடன் வாழ்ந்த ஒருவரின் வாழ்வை கொண்டாடுவதே இந்த குறும்தொடரின் நோக்கம் என நைன்நெட்வேர்க்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.