நியூசிலாந்திற்கு வருகை தந்து இலங்கையர்கள் வாழலாம்!

176 0

இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவுள்ள நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்று நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் நேற்று முன்தினம்(13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம்.

ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள். அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இலங்கையில் இருக்கும் மக்கள் நியூசிலாந்துக்கு வரமுடியும் அங்கே வாழ முடியும். இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள் நியூசிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன்.

நியூசிலாந்திற்கு வருகை தந்து இலங்கையர்கள் வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு(Photos) | Sri Lankans Can Live In New Zealand

எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன். அது ஒரு நீண்ட பயண வழிமுறையாக இருந்தாலும் அது நடக்கலாம். நடப்பதற்கு சாத்தியமுள்ளது.

நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்தவேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டும்.”என கூறியள்ளார்.

காத்தான்குடியில் பெண்களுக்கான திட்டம்

நியூசிலாந்திற்கு வருகை தந்து இலங்கையர்கள் வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு(Photos) | Sri Lankans Can Live In New Zealand

இதேவேளை வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.