6 மாதங்களுக்குப் பிறகு உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த கார்கிவ் நகரம்

146 0

கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கார்க்கிவ் நகரின் முக்கிய இடங்களில் உக்ரைனின் கொடி உயர பறந்து வருகிறது.

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பித்து ஓடினர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கார்கிவ் நகரத்தில் ரஷ்யப் படைகள் பின்தங்கி இருந்தன.

அதாவது, சுமார் 6,000 சதுர கிமீக்கு ரஷ்ய படைகள் பின் தங்கி உள்ளன. இந்த நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கார்கிவ் மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும், கார்கிவ் மாகாணத்தில் நடப்பட்டிருந்த ரஷ்யாவின் கொடிகளையும் ராணுவ வீரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்த ஆறு மாத காலக்கட்டத்தில் கார்கிவ் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனினும், கிழக்குப் பகுதியில் உக்ரைன் – ரஷ்யா இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.