வடக்கு மாகாண சுகாதார துறைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகே அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் எந்தவொரு வைத்தியசாலை, பொது சுகாதார மையம் அல்லது அரசாங்கத்தின் சுகாதார நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் பொதுமக்கள் பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அவ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. தாங்கள் அளிக்கும் எந்த ஒரு நன்கொடையினையும் பெற்றுக்கொண்டமைக்கான உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள்.
2. அத்தோடு நன்கொடை பெறப்பட்ட நாள் நேரம்,
பெறப்பட்ட நன்கொடையின் விபரம், தொகை,
பெறப்பட்ட நன்கொடையானது நிறுவன நன்கொடைப் பதிவேட்டில் பதியப்பட்டதை உறுதிப்படுத்தும் பதிவேட்டு எண்,
நன்கொடையினைப் பெற்றுக்கொண்ட நிறுவனத் தலைவரின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் கடிதம் போன்ற விடயங்கள் அடங்கியிருப்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள் வேண்டும்.3. அவ்வாறு தாங்கள் பெற்றுக்கொண்ட நன்கொடை உறுதிப்படுத்தல் கடிதத்தின் பிரதியினை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்-வடமாகாணம், மத்திய கணக்காய்வுத் திணைக்களம் -வடமாகாணம், மற்றும் மாகாண கணக்காய்வு திணைக்களம் -வடமாகாணம், ஆகியவற்றுக்குப் பதிவு தபாலில் அல்லது தொலைநகலில் அனுப்பி வைக்க வேண்டும்.
4. மேலும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குரிய பிரதியினை 0773868579 என்ற உத்தியோகப்பூர்வ தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப், வைபர், டெலிகிராம், சிக்னல் செயலிகள் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலிப் லியனகே தெரிவித்துள்ளார்.