ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி

322 0

ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான மன உளைச்சலை கொடுத்துள்ளதாக அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனீவாவுக்கு செல்வதாக சில ஊடகங்கள் எழுதுவதாகவும், இதுதொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை. ஊடக தர்மம் இல்லாமல் எழுதுகின்ற ஊடக எழுத்துக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.