அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு தசாப்த கால பகுதியில் முடியாட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சார்ல்ஸ் மன்னரான பின்னர் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ரோய்மோர்கன் எஸ்எம்எஸ் கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.அனைத்து வயதினரும் குடியரசை விட முடியாட்சியை விரும்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை விட முடியாட்சியை விரும்புவதாக கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 66 வீதமான பெண்களும் 54 வயது ஆண்களும் தெரிவித்துள்ளனர்.
முதிய அவுஸ்திரேலியர்கள் மத்தியில் முடியாட்சிக்கு அதிக ஆதரவு உள்ளமையும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 61 வீதமானவர்கள் முடியாட்சிக்கு தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
முடியாட்சியை ஏன் தொடர்ந்து தக்கவைக்கவேண்டும் என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்கள் செயற்படும் ஒன்றை ஏன் மாற்றவேண்டும் என பதிலளித்;துள்ளனர்.
எனினும் குடியரசு இயக்கத்தின் ஆதரவாளர்கள் அவுஸ்திரேலியாவை முழுமையான சுதந்திர நாடாக மாற்றவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.முடியாட்சியை தொடர்ந்தும் பேணுவது அவுஸ்திரேலியர்களிற்கு அவமானகரமான விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கணிப்பை முன்னெடுத்த ரோய்மோகனின் பிரதம நிறைவேற்று அதிகாரி அவுஸ்திரேலியர்கள் புதிய மன்னரிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை கொண்ட குடியரசை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இந்த கேள்விகளிற்கான முன்னைய பதிலை அடிப்படையாக வைத்து 2010 முதல் அனேகமான அவுஸ்திரேலியர்கள் முடியாட்சி தொடர்வதை விரும்புவது புலனாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.