அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது – உலக தமிழர் பேரவை

116 0

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட  அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ள உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அதன் பின்னர் சாத்தியமற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு உதவும் எங்கள் நோக்கம் தடைகள் தொடர்வது நீக்கப்படுவதற்கு அப்பாற்பட்டது என  குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வருடம் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிற்கு பின்னர் கொவிட் பெருந்தொற்றினால் இலங்கையர்கள் பலர் பலியான வேளை உலக தமிழர் பேரவை இலங்கை மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக காணப்பட்ட 2.6மில்லியன் பெறுமதியான செயற்கை சுவாசக்கருவிகளை வழங்கியது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தடைகள் நாங்கள் உதவிகளை வழங்குவதை தடுக்கவில்லை,எனினும் இந்த தடை காரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்கள் உதவிகளை நிராகரித்தனர் என குறிப்பிட்டுள்ள சுரேன்சுரேந்திரன் எங்கள் சலுகைகள் மற்றும் விலையுயர்ந்த மற்றும் அவசரமாக தேவைப்படும் உபகரணங்களை வேறு நாடுகளிற்கு வழங்குமாறு எழுத்துபூர்வமாக கோரினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 இல் இலங்கையின் தென்பகுதி வெள்ளத்தின் போது சிங்கள கிராமங்களான மாத்தறை களுத்துறைக்கு உதவுவதற்கு உலக தமிழர் பேரவை மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை அனுப்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நாங்கள் உதவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளோமா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் இலங்கை அரசாங்கம் தடையை அகற்றும் தடையை அறிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக இலங்கையின் இந்த தன்னிச்சையான அர்த்தபூர்வமற்ற நடவடிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனதெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் நாங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு உதவி வழங்கினோம் என தெரிவித்து சில புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடை செய்தது,எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இலங்கை முன்வைக்கவில்லை, இலங்கை தன்னிடமிருந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நபர்கள் அமைப்புகளிற்கு தெரியப்படுத்தி  அவர்கள் தங்கள் சார்பில் தடைக்கு எதிராக வாதாடுவதற்கான  வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்,எனினும் இந்த நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் தடைகள் விதிக்கப்பட்டன எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை நடவடிக்கை தன்னிச்சையானது அர்த்தபூர்வமற்றதுஐநாவின் விதிமுறைகளைமுற்றாக மீறுவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தடையை முற்றாக புறக்கணித்தன,சில தரப்பினர் இது தன்னிச்சையானது நிராகரிக்கின்றோம் என  அறிக்கைகளை வெளியிட்டனர் அதேவேளை ஏனைய அரசாங்க அதிகாரிகள் பகிரங்கமாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.