தாமரைக்கோபுர நுழைவுச் சீட்டு குறித்து எழுந்த சர்ச்சை !

111 0

சமூக ஊடகங்களில் தாமரைக்கோபுர நுழைவுச் சீட்டின் போலியான நுழைவுச் சீட்டொன்று வைரலாகி பரவிவருகின்றது.

குறித்த போலி நுழைவுச்சீட்டில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகள் காணப்படுகின்றன. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நுழைவுச்சீட்டு தொடர்பில் வீரகேசரி ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் அது போலியான நுழைவுச் சீட்டு எனத் தெரியவந்துள்ளது.

குறித்த போலி நுழைவுச்சீட்டு குறித்து இலங்கையில் உள்ள சீனத் தூதரகமும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தலை பதிவிட்டுள்ளது.