டைட்டானிக் கப்பலைப் போல நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது!

166 0

தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதியானது ராஜபக்சர்களின் ஆசியுடன் என்பது உண்மையே என்றாலும், முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இந்நாட்டின் பொது மக்கள் போராட்டத்தினாலையே என்பதை ஜனாதிபதி மறந்துவிட்டார் எனவும், அதை அவர் நினைவில் வைத்திருந்தால்,அவரால் இவ்வளவு கடுமையாக அடக்குமுறையை அமுல்படுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மோசமான ஆட்சி மிக்க அரசாங்கத்தை மாற்றுவதற்கு கொள்கை ரீதியாக தலையிட்டதற்காக, கடந்த மே மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் 3,500 இக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 1,200 இக்கும் அதிகமானோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தெஹிவளை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முழு நாட்டு மக்களையும் மரணப் படுக்கைக்கு இட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், டைட்டானிக் கப்பலைப் போல நாடு மூழ்கும் போது, ​அரசாங்கம் அந்த அவல நிலையிலும் கூட, சுய நினைவிழந்தது போல களியாட்ட மகிழும் கேளிக்கை நடனமாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.