தொடரும் கரோனா உயிரிழப்புகள் – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

126 0

கரோனாவால் உலகில் 44 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று உலக அளவில் குறைந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “கரோனா தொற்றும் உயிரிழப்புகளும் உலக அளவில் குறைந்து வருவது உண்மைதான். இது ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் எனற போதிலும், இதே நிலை தொடரும் என்பதற்கோ மீண்டும் தொற்று அதிகரிக்காது என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கரோனா வாராந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. கடந்த வார அறிக்கையின்படி ஒவ்வொரு 44 வினாடிகளுக்கும் உலகில் ஒருவர் கரோனாவால் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தவிர்க்கக்கூடியவையே. கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வைரஸ் எளிதில் மறைந்துவிடாது.