மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில்

112 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா செல்லவுள்ளார்.

பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

இதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 17 அல்லது 18 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் 19ஆம் திகதி நடைபெறும் நிலையில், இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.