தற்போதைய அமைச்சரவையானது குறுக்கு வழியில் நிற்கும் விரட்டியடிக்கப்பட்ட கால்நடைக் கூட்டம் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தொலைபேசிக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அரச நிதியில் அவர்கள் சுகபோகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைச் சார்ந்தவர்களே அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஆகவே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவர்களுடன் ஒன்றிணைய போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.