நாமலுக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவி

202 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸீற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர்,யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைக்கும் முன்னெடுப்புக்களை பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சியை முழுiமாக மறுசீரமைக்க பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் அடிமட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்து மாதாந்தம் கூட்டத்தை நடத்தவும் கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.