பதவிகளைப் பெற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எடுத்த தீர்மானம் நூறு வீதம் சரி என இன்று நொடிக்கு நொடி நிரூபணமாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள வேளையில், அது தொடர்பாக எந்தவித உணர்வும் இன்றி அரசாங்கம் முப்பத்தேழு பிரதி அமைச்சர்களை நியமித்து, மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான வீழ்ச்சியை சந்தித்த எந்தவொரு நாடும் செய்யாத வகையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் மூலம் மக்கள் மேலும் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் இவ்வாறான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள போது, அமைச்சர்கள் தமது விருப்பு வெறுப்புகளை தேடி பதவி ஏலம் விடப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதுவொரு வெற்று அமைச்சுச் சூதாட்டம் எனவும் தெரிவித்தார்.
அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (09) மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடியதோடு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடவும் பட்டது.
உரிய விடயங்கள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றமை தொடர்பில் அவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்ததோடு,தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.