இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார்

239 0

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு அமெரிக்கா உதவும் பாரிஸ் கிளப் கொள்கைகளின் அடிப்படையில் நிதி உத்தரவாதங்களை வழங்கும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை தொடர்பில் உலகவங்கி உட்பட சர்வதேச நாணயநிதியம் உட்பட சர்வதேச நிதியமைப்புகள்  மற்றும் அமெரிக்க அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடிதமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

மிகமோசமான நிதிப்பேரழிவிலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை கடந்த மாதத்தின் இறுதிவாரம்  2.9 பில்லியன் டொலர் கடனுதவி தொடர்பாக சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியிருந்தது.

கடன்வழங்கிய நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் என செவ்வாய்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள யெலென்  இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரும் பேச்சுவார்த்தைகள் மற்றும் மறுசீரமைப்பில் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கையின் பேச்சுவார்த்தைகளிற்கு உதவுவதற்காக  அமெரிக்க திறைசேரி பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஸ்தாபனங்கள் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் எனவும் அமெரி;க்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்