வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு, அப்பல்கலைக்கழகத்தின் உயர் அதரிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,
வெளிநாட்டு மாணவர்களுக்கான பட்டப்படப்பினை மையப்படுத்தி நன்யங் பல்கலைக்கழத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தேன்.
வடமாகாண மாணவர்கள் மட்டுமன்றி இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் உள்ள மாணவர்கள் தொலைதூரக் கல்விமூலம் கற்கைகளை முன்னெடுப்பது பற்றியும் பேச்சுக்களை நடத்தியிருந்தேன்.
அத்துடன், குறித்த பல்கலைக்கழத்தின் ஊடாக உள்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க முடியுமா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதேநேரம், எமது நாட்டின் பொதுசுகாதார அதிகாரிகளின் திறன், இளையோருக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாயம் ஆகிய விடயப்பரப்புக்களில் மாணவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது என்றார்.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் தற்போது 34ஆயிரம் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.