இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் வடமாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிபுப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் நாட்டில் சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.
ஏற்கனவே ஒரு பகுதியினர் இலங்கைக்கு திரும்பியுள்ள நிலையில் படிப்படியாக தாய்நாட்டுக்கு வருகைதருபவர்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
வருகை தரும் குடும்பங்களில் காணி அற்றவர்களுக்கு அரச நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தியாவிலிருந்து வருகை தரும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசு வழங்கும் வீட்டுத் திட்டத்தின் நிதியை அதிகரிக்குமாறு இந்திய அரசை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்நாட்டில் உள்ள இந்தியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனுக்கு இந்த விடயம் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியாவிலிருந்து திரும்பவுள்ள 3024குடும்பங்களுக்க 1163ஏக்கர் காணிகளை வழங்க முடியும் என்று வடமாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் கடிதம் மூலம் ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.