ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !

221 0

மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் கடந்த கால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதற்கா பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை தனது அரசியல்வாழ்வின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அறிக்கை இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் உள்ளது அது அனைத்து பிரிவு மக்களினதும் மனித உரிமைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது பரந்துபட்ட சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோள்களை இலங்கையின் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் உருவாக்கியுள்ளது,இதனால் நாட்டை புதிய பாதையில் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

பேண்தகுமுன்னேற்றங்கள் நிகழ்வதற்கு  கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டமை பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல்கள் போன்றஅடிப்படை காரணிகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வை காண்பது  அவசியம் எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சவால்களிற்கு தீர்வை காண்பதற்கும் கடந்த காலமீறல்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கும் அடிப்படை மாற்றங்கள் அவசியம் என மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிகமோசமான பாதுகாப்பு சட்டங்களை ஆர்ப்பாட்டக்காரர்களை  கைதுசெய்வதை  இராணுவமயமாக்கலை நோக்கி நகர்வதை அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவரவேண்டும்,பாதுகாப்பு சீர்திருத்தங்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்றவை குறித்த புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணி;ப்பையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையி;ல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.