இலங்கைக்கான சீனத் தூதுவர் சி.ஷென்ஹோன், ஆளுநரிடம் SMART BOARD கையிருப்பை வழங்கியதை அடுத்து, கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 20 பாடசாலைகளுக்கு தலா ஒரு SMART BOARD வழங்கப்பட்டது.
அங்கு ஆளுநர் மற்றும் சீனத் தூதுவர் ஆகியோர் உரிய SMART BOARDஐ அந்தக் கல்லூரிகளின் அதிபர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே சீனத் தூதுவர் இந்த SMART BOARD கையிருப்பை மிகக் குறுகிய காலத்தில் வழங்கியுள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை பொருத்துவதற்கான ஒப்பந்தமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. கிழக்கு மாகாண சபையும் சீனாவின் “யுன்னான் வர்த்தக சங்கமும்” இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.