நான்கு நாள் உத்தியோகபூர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய என்பவற்றிற்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர் உள்ளிட்ட குழுவினர், பிரதமர் மல்கம் டேன்புல் மற்றும் அமைச்சர்களுடன் இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதுதவிர, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.