உக்ரேன் போர்க்களத்தில் அவுஸ்திரேலியர் பலி

118 0

உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஸ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் உலகின் பல பகுதிகளிற்கு சென்றுள்ளார் உலகம் முழுவதும் நண்பர்கள் உள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் உள்ள அவரது சகாக்கள் ஜெட்டினை தங்கள் அணியின் முதுகெலும்பு என வர்ணித்துள்ளனர்  தாங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைக்ககூடிய நபர் என வர்ணித்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கான உக்ரேனின் தூதுவரும் கொல்லப்பட்டவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.