பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தலைமையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் – ஹேஷா விதானகே

106 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியின் தலைமையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் கொண்டாடப்படுகிறது. தற்போதிருப்பவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி அல்ல என்பதை அக்கட்சி ஆதரவாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது சம்மேளனம் கொண்டாடப்படுகிறது. இந்த 76 ஆவது சம்மேளனம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் கொண்டாடப்படுவதாக பாரிய பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதிருப்பது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி அல்ல என்பதை பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கின்றோம்.

தறபோதிருப்பவர் பொதுஜன பெரமுன ஜனாதிபதியாவார். அதற்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனம் கொண்டாடப்படுகிறது என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

என்ன சம்மேளனத்தைக் கொண்டாடினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பஷில் ராஜபக்ஷவின் கைப்பாவையாகவே செயற்படுகிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்.