அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு முரண்பட்டுள்ளது

287 0

அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு தற்போது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாற்றக் கூடிய பந்திகளில் கை வைக்க போவதில்லை எனக் கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் தரப்பான நாடாளுமன்றத்தின் சபை முதல்வர், வெளிவிவகார அமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை சர்வஜன வாக்கெடுப்பில் நிறைவேற்ற போவதாக கூறி வருகின்றனர் எனவும் முஸ்ஸமில் கூறியுள்ளார்.