கேப்பாபுலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று காலை இந்த ஆர்பாட்;டம் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பொது அமைப்புகள் பங்குகொண்டன.