இன வாத கருத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல

324 0

இன வாத கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்றும் பலர் இனவாதத்தை தூண்டி மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்ல முனைகின்றனர்.

இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோருகின்றோம்.

ஐக்கிய தேசிய கட்சி சிங்கள பௌத்தர்களை காப்பது போல் வேறு மதத்தினரையும் இனத்தவர்களையும் பாதுகாக்கும்.

நாட்டில் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்ரே அவசியமாக உள்ளது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.