புதிய அரசியல் அமைப்புக்கான யோசனை என்பது பொய் – மஹிந்த அணி

298 0

அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனை பெற்றுக்கொண்டு புதிய அரசியல் அமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தயாரித்து நிறைவுப்பெற்றுள்ளது.

ஆலோசனை பெறுகின்றோம் என்பது பொய்யான விடயமே.

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் புலம்பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.