அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்ட ”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலாவிற்கு ஆதரவாக 94 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பொது மக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவரில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என பல்வேறு அமைப்புகள் சார்பில் கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த கருத்து கணிப்புகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கே அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடசியின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்ட ”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல் 48 மணி நேரத்துக்குள் 33 லட்சம் பேர் ஆதரித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 3 பேர் தமது ஆதரவினை பன்னீர் செல்வத்திற்கு வழங்கியுள்ளனர்.
அத்துடன் பல இந்து அமைப்புக்களும், திரைத்துறை பிரபலங்களும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாளைய தினத்துக்குள் தமிழக முதலமைச்சர் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படாதபட்சத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி எச்சரித்துள்ளார்.