அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது – மஹிந்த

354 0

அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போதும், புதிதாக அதிவேக நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகின்ற போதும் தொடருந்துகள் கொண்டுவரப்படுகின்ற போதும் மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கு காணிகளின் பாகங்கள் சுவீகரிக்கப்பட்டாலும் ஏனைய பாகத்திற்கு அதனை விட பன்மடங்கு பெறுதி அதிகரிக்கப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.