ஹொரணை – கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டது.
இதன்போது 28 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
இன்று முற்பகல் இந்த முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காவற்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.