நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி வரை கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை எத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலையளிப்பதாக வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.